உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  நாட்டுக்கோழி வளர்ப்பு  பயிற்சிக்கு வரவேற்பு

 நாட்டுக்கோழி வளர்ப்பு  பயிற்சிக்கு வரவேற்பு

தேனி: தேனி - மதுரை ரோட்டில் அரண்மனைப்புதுார் ரயில்வே கேட் அருகே தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை உழவர் பயிற்சி மையம் உள்ளது. பல்கலையும், தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக் கழகமும் இணைந்து தமிழக முதல்வரின் நான் முதல்வன் - வெற்றி நிச்சயம்' திட்டத்தின் கீழ் நாட்டுக் கோழி வளர்ப்பு திறன் மேம்பாட்டுப் பயிற்சி நவ.,26 துவங்க உள்ளது. பயிற்சி முடிவில் அரசின் சான்றிதழ் வழங்கப் படும். வேலையில்லா பட்டதாரிகள், சுய தொழில்புரிவோர், விவசாயிகள் பயிற்சியில் பங்கேற்று பயன் பெறலாம். பயிற்சி பெற விரும்புவோர் 98650 16174 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, உழவர் பயிற்சி மைய தலைவர் விமல்ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்