உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 2013க்கு பின் பிறந்தவர்களுக்கு தமிழ், ஆங்கிலத்தில் பிறப்பு சான்றிதழ் கம்ப்யூட்டரில் சரிபார்க்கும் பணி தீவிரம்

2013க்கு பின் பிறந்தவர்களுக்கு தமிழ், ஆங்கிலத்தில் பிறப்பு சான்றிதழ் கம்ப்யூட்டரில் சரிபார்க்கும் பணி தீவிரம்

தேனி:தமிழகத்தில் 2013 முதல் 2017 வரை பிறந்த குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் ஆங்கிலம், தமிழ் மொழிகளில் வழங்க சுகாதாரத்துறையினர் நடவடி க்கை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு நகராட்சி அலுவலகங்கள், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகள் மூலம் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. 2018க்கு பின் பிறந்த குழந்தைகளுக்கு மட்டும் பிறப்பு சான்றிதழ் தமிழ், ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது. அதற்கு முன் பிறந்த குழந்தைகளுக்கு தமிழ் அல்லது ஆங்கிலம் என ஏதாவது ஒரு மொழியில் வழங்கப்படுகிறது. இதனால் ஒரு குழந்தைக்கு தனிதனியாக இரு மொழிகளில் சான்றிதழ் பெறும் சூழல் நிலவுகிறது. சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், '2013 முதல் 2017 வரை பிறந்த குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்கள் சாப்ட்வேரில் பதிவேற்றப்பட்டுள்ளது. அரசு பதிவேடுகளில் உள்ள விபரம் கம்யூட்டரில் சரியாக பதிவேற்றப்பட்டுள்ளதா என சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் 2013க்கு பின் பிறந்த குழந்தைகளுக்கு இரு மொழியில் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை