உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பெண் போஸ்ட் மாஸ்டர் மயங்கி விழுந்து பலி

பெண் போஸ்ட் மாஸ்டர் மயங்கி விழுந்து பலி

திருநெல்வேலி : திசையன்விளை அருகே வீட்டில் மயங்கி விழுந்த பெண் போஸ்ட் மாஸ்டர் இறந்தார்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல்பாண்டியன் நகரைச் சேர்ந்த முகவூர்காளை என்பவரின் மகள் ராஜேஸ்வரி 29. இவர் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ராமன்குடி தபால் அலுவலகத்தில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றினார். அங்கேயே வாடகை வீட்டில் தாயார் காளியம்மாளுடன் வசித்து வந்தார்.உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த ராஜேஸ்வரி , வீட்டு பாத்ரூமில் மயங்கி விழுந்தார். தலையில் அடிபட்டது. சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் அங்கு இறந்தார். உவரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை