உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / திருநெல்வேலி கலெக்டருக்கு எதிராக அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி கலெக்டருக்கு எதிராக அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி கலெக்டர் கார்த்திகேயன் பல ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து வருகிறார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கலெக்டரை சந்தித்து ஊழியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தினர். இருப்பினும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.எனவே நேற்று மாலை கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலச் செயலாளர் சுப்பு தலைமை வகித்தார். முகமது புகாரி உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஊழியர்கள் மீது எடுத்த நடவடிக்கைகளை திரும்பப் பெறாவிட்டால் ஜூலை 25ல் அனைத்து துறை சார்பில் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Narayanasamy
ஜூலை 24, 2024 09:20

நல்ல ஆட்சியர்.வாழ்த்துகள்.


VSMani
ஜூலை 23, 2024 11:21

நல்ல கலெக்டர். எனவே, கெட்ட அலுவலர்களுக்கு பிடிக்காது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை