உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கார் முற்றுகை: தி.மு.க.,வுக்கு எதிராக மீனவர்கள் போர்க்கொடி

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கார் முற்றுகை: தி.மு.க.,வுக்கு எதிராக மீனவர்கள் போர்க்கொடி

திருநெல்வேலி: தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களும், அதில் 561 மீன்பிடி கிராமங்களும் உள்ளன. தி.மு.க., அரசியல் ரீதியாக மீனவர்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்ற குறை நீண்ட காலமாக உள்ளது. துாத்துக்குடியை சேர்ந்த ஜெனிபர் தி.மு.க., அமைச்சரவையில் இடம் பெற்றார். அதன் பின் மீனவர்களுக்கு முக்கியத்துவம் குறைந்துவிட்டது. குறிப்பாக, மீன்வளத்துறை அமைச்சர் பொறுப்பை மீனவருக்கு தர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.இந்த முறை தி.மு.க., உள்ளிட்ட பிரதான கட்சிகள் மீனவர்களை வேட்பாளராக்கவில்லை என்பது குற்றச்சாட்டாகும். கன்னியாகுமரியில் அ.தி.மு.க., வேட்பாளராக மீனவ சமுதாயத்தை சேர்ந்த பசலியான் நஸரேத்க்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.திருநெல்வேலி லோக்சபா தொகுதியில், 9 கடலோர கிராமங்கள் உள்ளன. பஞ்சல், பெருமணல், இடிந்தகரை, கூடுதாழை, உவரி, கூத்தங்குழி, கூட்டப்பனை உள்ளிட்ட கிராமங்களில் 30,000க்கும் மேற்பட்ட ஓட்டுகள் உள்ளன.திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுவதால், தி.மு.க., ஆர்வமில்லாமல் உள்ளது. இருப்பினும், ஓட்டுகள் குறைந்து விடாமல் தவிர்க்க, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திருநெல்வேலி மாவட்ட மீனவ கிராமங்களின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.நேற்று கூடங்குளம் பகுதியில் ஓட்டு சேகரிப்புக்கு சென்ற அவரை, கிராம மக்கள் முற்றுகையிட்டனர். திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் டிசம்பரில் மழை வெள்ளம் ஏற்பட்டபோது, திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் படகுகளுடன் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு தலா, 22,500 ரூபாய் வழங்கப்படும் என, அரசு அறிவித்தது. ஆனால், அந்த தொகை இன்னும் வழங்கப்படவில்லை. பெண்களுக்கு வழங்கப்படும், 1,000 ரூபாய் உரிமைத் தொகையும் மீனவ கிராம பெண்களுக்கு சரியாக கிடைக்கவில்லை எனக்கூறி, அனிதா ராதாகிருஷ்ணன் காரை முற்றுகையிட்டனர்.கடலோர கிராமங்களில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு வீடுகள் பாதிப்படைந்துள்ளன. துாண்டில் வளைவு அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. துாண்டில் வளைவுகள் கோரி, துாத்துக்குடி மாவட்டத்திலேயே அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மீனவ கிராமத்தினர் கடும் நெருக்கடி அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mohan das GANDHI
ஏப் 02, 2024 15:44

தமிழ்நாட்டு மக்களை கிறுக்கங்கள் என்று நினைத்தார் போலும் அவர் திமுக ஊழல் மந்திரிகளும் கூடியவர்களே சாராயம் கஞ்சா கழகமே திமுக இம்முறை ஒட்டு இல்லை


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை