மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் நேற்று காலை, 9:30 மணிக்கு ஆய்வு செய்தனர். அப்போது கலெக்டர் கார்த்திகேயன் அங்கு வரவில்லை. அவரை அமைச்சர் நேரு மொபைல் போனில் அழைத்து பேசினார்.அப்போது, 'இரண்டு அமைச்சர்கள் வந்திருக்கிறோம். எங்கே இருக்கீங்க... கலெக்டர் வர வேண்டாமா' என, கட்சியினர், அதிகாரிகள் முன்னிலையில் கடுமையாக பேசினார். அங்கிருந்த மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, அமைச்சரிடம் ஏதோ சொல்ல வந்தார். ஆனால், அமைச்சர் அவரையும், 'போம்மா...' என, கடிந்து கொண்டார்.பின்னர், வெவ்வேறு இடங்களில் ஆய்வு செய்த பின், இறுதியாக ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அங்கு வந்த கலெக்டர், ஆடி அமாவாசைக்கு பாபநாசம் சொரிமுத்தையனார் கோவிலுக்கு சென்றிருந்ததாகவும், வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வர தாமதமானதாக அமைச்சரிடம் நேருவிடம் விளக்கம் அளித்தார்.
29-Sep-2025
25-Sep-2025