உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / போலீசார் தடியடி 20 பேர் கைது

போலீசார் தடியடி 20 பேர் கைது

திருநெல்வேலி:தேவர்குளம் பகுதியில் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.திருநெல்வேலி- சங்கரன்கோவில் சாலையில் தேவர்குளம், வன்னிகோனேந்தல் பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் மீது தேவர்குளம் போலீசார் வேண்டுமென்றே வழக்குகள் போடுவதாக புகார் கூறி போலீஸ் ஸ்டேஷனை நேற்று காலை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக வன்னிகோனேந்தலில் இருந்து கிளம்பினர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை. பொதுமக்கள் சங்கரன்கோவில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் வன்னிகோனேந்தல் ஊராட்சி துணைத்தலைவர் வள்ளிநாயகம் மயக்கமடைந்தார். அவரை மானுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி