மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்தில் ஒத்தி வைக்கப்பட்ட தீர்மானத்தை நிறைவேறியதாக திருத்தம் செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் சுகபுத்ரா தெரிவித்தார்.இம்மாநகராட்சியில் தி.மு.க., மேயர் சரவணனை மாற்றக்கோரி பெரும்பான்மை கவுன்சிலர்கள், மாநகராட்சி கூட்டங்களை தொடர்ந்து புறக்கணித்ததால், கூட்டங்கள் முறையாக நடக்கவில்லை. மேலப்பாளையம் மண்டலம் தமிழ்நகர் அருகில் 1.54 ஏக்கரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 25 வீட்டுமனை குடியிருப்பு திட்டத்திற்கு அனுமதி கோரி மாநகராட்சியில் 2023 நவ., 8ல் நடந்த கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.இத்திட்டத்தின் இரு திசைகளிலும் பிற குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் அணுகு சாலைகளுக்கு அனுமதி தராமல் இருப்பதால் பாதிப்பு உள்ளது என கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த தீர்மானத்தை ஒத்திவைத்தனர். ஜூன் 28ல் நடந்த கூட்டத்திலும் கொண்டுவரப்பட்ட இதே தீர்மானம் கவுன்சிலர்கள் எதிர்ப்பால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே மேயர் சரவணன் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.ஜூலை 15ல் துணை மேயர் கே.ஆர்.ராஜு தலைமையில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில், 190க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நகர் அருகில் புதிய வீட்டுமனைக்கு அனுமதி அளிக்கும் தீர்மானம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் அந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதாக வீட்டுமனை திட்டத்திற்கு அனுமதி வழங்க ஏற்பாடுகளை செய்தனர். நிறைவேற்றாத தீர்மானத்தை நிறைவேற்றியதாக அதிகாரிகள் மாற்றம் செய்தது குறித்து, தமிழ்நகர் மக்கள் புகார் அளித்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கமிஷனர் சுகபுத்ரா விசாரணை மேற்கொண்டார்.அவர் கூறுகையில் '' ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்ட தமிழ்நகர் அருகில் புதிய வீட்டுமனைக்கு அனுமதி அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் மாற்றங்களை செய்துள்ளனர். தற்போது அந்த தீர்மானம் மீண்டும் ஒத்தி வைக்கப்படுகிறது. மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேறாத ஒரு தீர்மானத்தை நிறைவேறியதாக மாற்றம் செய்த அதிகாரி யார் என விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
29-Sep-2025
25-Sep-2025