மேலும் செய்திகள்
கழிவுநீர் கலப்பதால் மாசடையும் குளம்
04-Nov-2025 | 1
நண்பரை குத்தி கொன்ற போதை ஆசாமி கைது
04-Nov-2025
போலி ஆவண மோசடி: சார்பதிவாளர் மீது வழக்கு
03-Nov-2025
கார் ஓட்டிய 17 வயது மகன் தந்தை கைது
02-Nov-2025 | 2
திருநெல்வேலி : களக்காடு அருகே முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது சகோதரர் வெட்டுக்காயங்களுடன் சிகிச்சையில் உள்ளார். இதுதொடர்பாக மூவரை போலீசார் தேடுகின்றனர்.திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே பெருமாள்குளத்தை சேர்ந்தவர் ஜான்சன் 30. அங்கு பீடி கம்பெனி நடத்தி வருகிறார். அங்கு கோயில்ராஜ் என்பவருக்கும் சம்பத்ராஜா என்பவருக்கும் இடையே தகராறு நடந்தது. இதில் ஜான்சன் கோயில்ராஜ்க்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். இதனால் சம்பத் ராஜா தரப்பினர் ஜான்சன் மீது ஆத்திரத்தில் இருந்தனர்.நேற்று முன்தினம் மாலையில் ஜான்சன் 30, அவரது தம்பி ஆல்பர்ட் ஜெயக்குமார் 23, ஆகியோர் பீடி கம்பெனி முன்பாக நின்ற போது அங்கு வந்த சம்பத்ராஜா, டாலி, பிரைட்சன் ஆகியோர் ஜான்சனையும், ஆல்பர்ட் ஜெயக்குமாரையும் அரிவாளால் வெட்டி இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். திருநெல்வேலி அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட ஆல்பர்ட் ஜெயக்குமார் இறந்தார். ஜான்சன் சிகிச்சையில் உள்ளார். களக்காடு போலீசார் மூவரை தேடுகின்றனர்.
04-Nov-2025 | 1
04-Nov-2025
03-Nov-2025
02-Nov-2025 | 2