மேலும் செய்திகள்
பெண்ணிடம் சில்மிஷம் வன ஊழியர் சஸ்பெண்ட்
27-Oct-2025
பெண்ணிடம் அத்துமீறல் வன ஊழியர் கைது
27-Oct-2025
சிறுமிக்கு பாலியல் தொல்லை 59 வயது நபருக்கு 20 ஆண்டு
26-Oct-2025 | 1
அரசு பஸ் பயணிக்கு ரூ.20,000 இழப்பீடு
26-Oct-2025
திருநெல்வேலி : திருநெல்வேலியில் தனியார் திருமண மண்டபத்தில் அயோத்திர ராமர் கோயில் கும்பாபிேஷக நிகழ்வை திரையிட போலீசார் அனுமதி மறுத்ததால் ஹிந்து இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து திரையிட அனுமதியளிக்கப்பட்டது.திருநெல்வேலி கோபாலசாமி கோயில் அருகில் தனியார் மண்டபத்தில் நேற்று காலை அயோத்தி ராமர் கோயில் கும்பாபிேஷக நிகழ்வை திரையிட ஏற்பாடுகள் செய்திருந்தனர். போலீசார் அங்கிருந்தவர்களை வெளியேற்றி மண்டபத்திற்கு பூட்டு போட்டு அனுமதி மறுத்தனர்.இதை கண்டித்து பா.ஜ., ஹிந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அயோத்தி கும்பாபிேஷக நிகழ்வை தனியார் மண்டபங்களில் திரையிட அனுமதி போலீஸ் அனுமதி தேவையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து போலீசார் அனுமதி அளித்தனர். அதையடுத்து காலை 11:00 மணி முதல் தனியார் மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் அயோத்தி கோயில் கும்பாபிேஷகம் நிகழ்வு திரையிடப்பட்டது.
27-Oct-2025
27-Oct-2025
26-Oct-2025 | 1
26-Oct-2025