உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பள்ளிகளில் சாதி சான்றிதழ் பெற காலதாமதம் பழைய முறையை அமல்படுத்த வலியுறுத்தல்

பள்ளிகளில் சாதி சான்றிதழ் பெற காலதாமதம் பழைய முறையை அமல்படுத்த வலியுறுத்தல்

குற்றாலம் : 'சாதிச்சான்று மனுக்களை பள்ளியிலிருந்து தாலுகா ஆபிசுக்கு அனுப்பும் பழைய முறையை செயல்படுத்த வேண்டும்' என மாணவ, மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர். மாணவ, மாணவிகளுக்கு பள்ளி மூலம் நிரந்தர சாதிச்சான்று அட்டை பெற்று வழங்கி வரும் முறையை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி 10 மற்றும் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி மூலம் சாதிச்சான்று பெற்று வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு கல்வி ஆண்டு முதல் மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி சாதிச்சான்று வழங்கும் போது அம்மாணவர்களுக்கு இருப்பிட சான்று மற்றும் வருமான சான்று ஆகிய இரண்டும் சேர்ந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாதிச்சான்று பெற ஒரு விண்ணப்பமும், இருப்பிட சான்று மற்றும் வருமான சான்று பெற மற்றொரு விண்ணப்பமும் ஆக ஒவ்வொரு மாணவ, மாணவியிடமும் இரண்டு விண்ணப்பங்கள் பள்ளி மூலம் பெற்று அனுப்பப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகளிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்ப மனுக்கள் பள்ளி மூலம் செப்.15ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், பெறப்பட்ட விண்ணப்ப மனுக்கள் மீது பரிசீலனை முடித்து வரும் 2012 ஜனவரி மாதத்திற்குள் மாணவ, மாணவிகளுக்கு நிரந்தர சாதிச்சன்று வழங்கப்படும் என வருவாய்த்துறை மூலம் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டுகளில் மாணவ, மாணவிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்ப மனுக்கள் பள்ளி அமைந்துள்ள பகுதியிலுள்ள தாலுகா ஆபீசில் பள்ளிகள் மூலம் நேரடியாக சேர்க்கப்பட்டு பின் சான்றுகள் பெற்று மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. தற்போது இம்முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது உள்ள புதிய முறையில் மாணவ, மாணவிகளிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்ப மனுக்கள் அனைத்தும் பள்ளி வாரியாக அந்தந்த கல்வி மாவட்ட அலுவலகத்தில் சேர்க்கப்பட்டு வருகிறது. கல்வி அலுவலக பரிசீலனை முடிந்த ஒரு மாதம் கழித்து இம்மனுக்கள் அனைத்தும் பெறப்பட்ட பள்ளிகளுக்கே திரும்பவும் திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்பிறகு தான் இம்மனுக்கள் சம்பந்தப்பட்ட தாலுகா ஆபீசுக்கு பள்ளி மூலம் ஒப்படைக்கப்படுகிறது. இம்முறை பின்பற்றப்படுவதால் மாணவ, மாணவிகள் சாதிச்சான்று பெறுவதில் காலதாமதமும், வீண் விரயமும், அலைச்சலும் ஏற்படுகிறது. இதனை மாற்றியமைக்க அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றும், மீண்டும் பழைய முறையை செயல்படுத்த அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி