உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பெருமாள்புரம் நில அபகரிப்பு வழக்கில் கருப்பசாமிபாண்டியன் ஜாமின் மனு தள்ளுபடி

பெருமாள்புரம் நில அபகரிப்பு வழக்கில் கருப்பசாமிபாண்டியன் ஜாமின் மனு தள்ளுபடி

திருநெல்வேலி : பெருமாள்புரம் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட கருப்பசாமி பாண்டியன் ஜாமின் மனுவையும், போலீஸ் காவலில் எடுப்பது தொடர்பான மனுவையும் நெல்லை கோர்ட் தள்ளுபடி செய்தது. குற்றாலத்தை சேர்ந்த அசோக்பாண்டியன். இவர் பாளை., பெருமாள்புரத்தில் உள்ள தனது நிலத்தை அபகரிப்பு செய்ததாக திமுக மாவட்ட செயலாளர் கருப்பசாமிபாண்டியன் மீது புகார் செய்தார். இதன் பேரில் மாநகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். இதனையடுத்து கருப்பசாமிபாண்டியனை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரி ஜே.எம்.1 கோர்ட்டில் கடந்த 15ம்தேதி இன்ஸ்பெக்டர் பொன்னரசு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுமீதான விசாரணை நேற்றும் நடந்தது. அப்போது மாஜிஸ்திரேட் ராபின்சன் சார்ஜ் போலீஸ் காவலில் எடுப்பது தொடர்பான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதுபோல் கருப்பசாமி பாண்டியன் ஜாமின் மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. கருப்பசாமிபாண்டியன் தரப்பு வக்கீல்கள் தங்கள் வாதத்தை மாஜிஸ்திரேட்டிடம் எடுத்துக் கூறினர். இதனையடுத்து மாஜிஸ்திரேட் ராபின்சன் ஜார்ஜ், கருப்பசாமிபாண்டியன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை