உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / அரசு நிர்வாகத்தில் ஜாதி பாகுபாடு கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

அரசு நிர்வாகத்தில் ஜாதி பாகுபாடு கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

திருநெல்வேலி: ''அரசு நிர்வாகத்தில் கீழே தலையாரியில் இருந்து மேலே கலெக்டர் வரை ஜாதியப் பாகுபாடு பார்க்கும் மனநிலை நிலவுகிறது'' என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டினார். திருநெல்வேலியில் அவர் கூறியதாவது: எங்கள் கட்சியின் 7வது மாநில மாநாடு 2026 ஜன., 7 ல் மதுரையில் நடக்கிறது. இதை முன்னிட்டு தென்தமிழக கிராமங்களில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை அறிய சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். திருநெல்வேலி மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்களைச் சந்தித்தேன். தேவேந்திர குல வேளாளர் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. ஊராட்சி முதல் மாநகராட்சி அதிகாரிகள் வரை ஜாதிய மனப்பான்மையுடன் செயல்படுகின்றனர். நிதி ஒதுக்கீட்டிலும் கடுமையான பாகுபாடு உள்ளது. அதிகாரிகள் உண்மையை மறைத்து முதல்வரிடம் எல்லாம் நன்றாக இருப்பதாக கூறி ஏமாற்றுகின்றனர். பாகுபாடு காட்டும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, தேவைப்பட்டால் கைது செய்யவும் வேண்டும். இந்த பிரச்னைகளுக்கு தீர்வு கோரி நவ., 20 ல் திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை