உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நெல்லை மாவட்ட காங்., தலைவர் எரித்துக் கொலை?

நெல்லை மாவட்ட காங்., தலைவர் எரித்துக் கொலை?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: காணாமல் போனதாக போலீசாரால் தேடப்பட்டு வந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், அவரது தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=alm2w8xk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருநெல்வேலியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருப்பவர் கே.பி.கே. ஜெயக்குமார். திசையன்விளை அருகே கரைசுற்றுப்புதூர் பகுதியில் அவரது வீடு உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இவரை கண்டுபிடித்து தருமாறு அவரது மகன் கருத்தையா ஜாபிரின், உவரி போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நிலத்தகராறு, கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, மற்றும் கட்சி கோஷ்டி பூசல் உள்ளிட்ட பல பிரச்னைகள் இருந்து வந்ததாக தெரிகிறது. கொலை மிரட்டல் வருவதாகவும் போலீசில் புகார் அளித்து இருந்தார்.இந்நிலையில், வீடு அருகே உள்ள அவரது தோட்டத்தில் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரை கொலை செய்தது யார்? என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் நெல்லை மாவட்ட எஸ்.பி., நேரில் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

manokaransubbia coimbatore
மே 04, 2024 20:08

இதென்ன பெரிய கேசு பேர் சரெண்டர் ஆவான் தோப்பில் வேலை செய்ததற்கு கூலி குறைவாக கொடுத்தத்தில் ஏற்பட்ட தகராறில் போட்டு தள்ளி விட்டோம் என்று சொல்லி உள்ளே போவார்கள் கேசு முடித்தது தினகரன் கேசு கிருஷ்ணன் கேசு சதீக்பட்ச கேசு லீலாவதி கேசு போலத்தான்


sridhar
மே 04, 2024 18:57

சந்தி சிரிக்குது சட்டம் ஒழுங்கு யாரோ ஒருத்தர் கொடைக்கானலில் பிடில் வாசித்துக்கொண்டு இருக்கிறார் இருக்கிறார்


Raghavan
மே 04, 2024 20:28

பிடில் வாசித்து முடித்துவிட்டு இப்போது மேளம் வாசித்துக்கொண்டு இருக்கிறார்


raja
மே 04, 2024 17:58

திராவிட மாடல் ஒருத்தன் நாக்கு மேல பள்ளு போட்டு குறை சொல்ல முடியாத படி ஆட்சி நடத்தும் திராவிட விடியல் முதல்வரா கொக்கா


sridhar
மே 04, 2024 16:57

நெல்லை காங்கிரஸில் உட்கட்சி பூசல் உச்சத்தில் இருக்கு , லோக்சபா தேர்தலில் தெரிந்தது


Duruvesan
மே 04, 2024 16:11

விடியல் சார் வாழ்க


Palanisamy Sekar
மே 04, 2024 16:00

இவரது கொலைக்கான காரணத்தை ஊரே அறிந்தநிலையில் போலீசுக்கும் புரிந்த நிலையில் விசாரணை என்பதெல்லாம் வேஸ்ட் காலம் கடந்துபோகும் ஆளும் திமுகவுடனான கூட்டணி உறவில் இந்த மரணம் முற்றிலுமாக மறைக்கப்படும் கவனிக்கவேண்டிய தலைகளை கவனித்திருப்பார்கள் அதனால் இவரது மரணம் மறக்கடிக்கப்படும் ஸ்டாலினின் ஆட்சியில் கொலைகார மாநிலமாக மாறிவிட்டது இனி இப்படித்தான் இருக்கும் ஸ்டாலின் இருக்கும் வரை விதி என்று விட்டுவிட்டு போய்விடுவார்கள்


அசோகன்
மே 04, 2024 15:51

திமுக காங்கிரஸ் ஐ தலையில் வைத்து கொண்டாடுகிறீர்கள்....... அவர்களை எதிர்த்தால் கொள்ளையை கண்டிதால் பதிலடி நிச்சயம்


ஆரூர் ரங்
மே 04, 2024 12:25

எந்தக் கொம்பனாலும் குறைகூற முடியாத ஆட்சி நடக்கிறது. கொடைக்கானல் மட்டுமல்ல.தமிழகமே அமைதிப்பூங்கா.. விடியல்.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ