உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துனரிடம் வாக்குவாதம் செய்த காவலர்

டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துனரிடம் வாக்குவாதம் செய்த காவலர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து நெல்லை வழியாக தூத்துக்குடி சென்ற அரசு பேருந்தில் காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.நாகர்கோவிலில் இருந்து நாங்குநேரி, நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு அரசு பேருந்து ஒன்று சென்றது. அந்த பேருந்து நாங்குநேரி நீதிமன்றம் முன்பு உள்ள நிறுத்தத்தில் இருந்து, காவலர் ஒருவர் பஸ்ஸில் ஏறி உள்ளார். இதனை அடுத்து நடத்துனர் அந்த காவலரிடம் டிக்கெட் கேட்டபோது, ''அந்த காவலர் அரசு பேருந்தில் அரசு பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான் எங்களுக்கும் டிக்கெட் கிடையாது,'' என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s332kncs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனைத் தொடர்ந்து நடத்துனர், ''அரசு பேருந்தில் காவலர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும். இல்லாத பட்சத்தில் டிக்கெட் எடுக்க வேண்டும்,'' எனக் கூறினார். இதனைத்தொடர்ந்து காவலர், ''எல்லோருக்கும் ஒரே விதிமுறைகளை கொண்டு வாருங்கள். போக்குவரத்து துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டும் இலவசம்; நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான், எங்களையும் இலவசமாக நீங்கள் பயணிக்க விட வேண்டும்'' என தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிறிது தூரத்தில் காவலரை நடத்துனர் இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

போக்குவரத்துத்துறை விளக்கம்

இது தொடர்பாக போக்குவரத்துத்துறை அளித்த விளக்கம்: வாரண்ட் இருந்தால் மட்டுமே போலீசார் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும். மற்ற நேரத்தில் காவலர்கள் டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும். இவ்வாறு விளக்கமளித்ததுடன், நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்துத்துறை பரிந்துரை செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

பேசும் தமிழன்
மே 23, 2024 08:05

காவல்துறையில் வேலை பார்த்தால் ....காய்கறி முதல் கறி வரை ....அனைத்தும் இலவசமாக வேண்டும் என்று நினைக்கிறார்கள்.


அப்புசாமி
மே 22, 2024 19:47

தாயுமானவன் திட்டத்தில்.இது மாதிரி போலீஸ்காரங்களுக்கும் ஏதாவது பாத்து போடுங்கய்யா. டிக்கெட் எடுக்க, டீ குடிக்க காசு இல்லாம திண்டாடுறாங்க.


Raju
மே 22, 2024 16:33

மகளிருக்குதான இலவசம்னு சொன்னாங்க


ஆரூர் ரங்
மே 22, 2024 15:14

ஓஷி நாடு?


N Sasikumar Yadhav
மே 22, 2024 15:03

திமுக தலைமையிலான விடியாத அரசு காவல்துறையினருக்கு ஏறக்குறைய மூன்று வருடங்களாக போக்குவரத்துக்கு செலவு செய்த பணம் கொடுக்கவில்லையாம் அப்படியிருந்தால் என்ன செய்ய முடியும்


N Sasikumar Yadhav
மே 22, 2024 15:03

திமுக தலைமையிலான விடியாத அரசு காவல்துறையினருக்கு ஏறக்குறைய மூன்று வருடங்களாக போக்குவரத்துக்கு செலவு செய்த பணம் கொடுக்கவில்லையாம் அப்படியிருந்தால் என்ன செய்ய முடியும்


V RAMASWAMY
மே 22, 2024 14:53

ஐந்தே ஆண்டு பதவியிலிருக்கும் எம் பி, எம் எல் ஏ க்களுக்கு ஏராள வசதிகள், பென்ஷன் இவை வழங்கும்போது ஏன் இவர்களுக்கு இலவச பயணம் வழங்கக்கூடாது? வெயிலோ மழையோ, குளிரோ, மக்களுக்காக உழைக்கும் காவலர்களுக்கு மட்டும் அவர்கள் குடும்பத்திரு அல்ல இலவச பயணம் தேவைதான்


ganapathy
மே 22, 2024 14:33

ஆமா இவனுங்க ஒழுங்கா மீதி காசு கொடுக்கறதேயில்ல இதுல திமிரு வேற


Jay
மே 22, 2024 14:12

போலீசார் பஸ்சில் பயணிக்கும்போது டிக்கெட் எடுக்கவேண்டுமா? இவ்வளவு காலம் போலீசாருக்கு அரசு மற்றும் தனியார் பேருந்தில் இலவசம் என்றல்லவா நினைத்திருந்தோம் டீசல் விற்க்கும் விலைக்கும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இருக்கும் கடனுக்கும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் இந்த போலீசாரை தைரியமாக வீடியோ எடுத்துப்போட்டு விழிப்புணர்வு கொடுத்த கண்டக்டர்ருக்கு நன்றி


சுந்தரம் விஸ்வநாதன்
மே 22, 2024 16:07

பணி நிமித்தம் பயணம் மேற்கொண்டால் வாரண்ட் இருந்தால் இலவசமே இந்த போலீஸ் காரர் சொல்வதுபோல அரசு ஊழியர்களுக்கெல்லாம் இலவசம் கிடையது ஒரு வகையில் போலீஸ்காரரை பாராட்ட வேண்டும், பஸ்சில் ஏறி இறங்கியதற்கு மாமூல் வாங்காமல் விட்டாரே


UTHAMAN
மே 22, 2024 11:40

இந்த கண்டக்டர் இப்படி பேசலாமா வேலை முக்கியமா மாவுக்கட்டு முக்கியமா என யோசிக்க வேண்டாமா


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை