உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தென்காசியில் சாலை மறியல் 16 பெண்கள் கைது

தென்காசியில் சாலை மறியல் 16 பெண்கள் கைது

தென்காசி : தென்காசியில் சாலை மறியல் போராட்டம் நடத்திய மாதர் சங்கத்தை சேர்ந்த 16 பேரை போலீசார் கைது செய்தனர்.ரேஷன் கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் சமையல் எண்ணெய், பருப்பு, மசாலா சாமான் வகைகள் தேவையான அளவிற்கு வழங்கிட வேண்டும். பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் உள்ள வறுமைகோடு பட்டியலை புதுப்பித்து அனைத்து ஏழை, எளிய மக்களையும் இணைத்து புதிய பட்டியலை வெளியிட வேண்டும்.முதியோர், விதவை, ஊனமுற்றோர் அனைவருக்கும் உதவித் தொகை வழங்கிட வேண்டும். உதவித் தொகை பெறுவதற்கு தேவையற்ற நிபந்தனைகளை தளர்த்தி விண்ணப்பித்த அனைவருக்கும் உதவித் தொகை வழங்கிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி, செங்கோட்டை வட்டார அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தென்காசி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.நகர செயலாளர்கள் தென்காசி அனிசாபேகம், செங்கோட்டை ஆயிஷாள் பீவி தலைமை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவி நிர்மலாராணி மறியல் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் கலா, சித்ரா, உமா, லட்சுமி, மீராள் பேகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை