உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / வி.கே.புரம் அருகே விவசாயியைதாக்கியவர் மீது வழக்கு

வி.கே.புரம் அருகே விவசாயியைதாக்கியவர் மீது வழக்கு

விக்கிரமசிங்கபுரம்:விக்கிரமசிங்கபுரம் அருகே கோடாரங்குளத்தில் முன் விரோதம் காரணமாக விவசாயியை தாக்கியவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.கோடாரங்குளம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மூக்கன் (60). விவசாயி. இதே ஊரை சேர்ந்தவர் முப்புடாதி. இவரது தங்கை மஞ்சுளாவை மூக்கன் மகன் பூதப்பாண்டி திருமணம் செய்து விவாகரத்து ஆகிவிட்டது. இதனால் மூக்கனுக்கும், முப்புடாதிக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இதில் நேற்று முன்தினம் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் முப்புடாதி மூக்கனின் தலையில் கல்லை தூக்கி எறிந்து காயப்படுத்தினார்.இச்சம்பவம் குறித்து மூக்கன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை