உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தென்காசியில் விநாயகர் சிலை விசர்ஜனம்

தென்காசியில் விநாயகர் சிலை விசர்ஜனம்

தென்காசி:தென்காசியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் விநாயகர் சிலை விசர்ஜனம் நடந்தது.தென்காசி காசிவிசுவநாதர் கோயில் முன் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. நேற்று மாலையில் வக்கீல் திருமால்வடிவு ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இதன் பின்னர் நடந்த கூட்டத்திற்கு இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். பா.ஜ.,மாநில செயற்குழு உறுப்பினர் குமரேச சீனிவாசன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ராஜாசிங், நகர தலைவர் விவேக் பாண்டியன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சாக்ரடீஸ், சிவா, வேலு பேசினர்.லோடு ஆட்டோவில் விநாயகர் சிலை ஏற்றப்பட்டு ரதவீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சிற்றாறு யானைப்பாலம் படித்துறையில் விநாயகர் சிலை விசர்ஜனம் நடந்தது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்காசி டி.எஸ்.பி.பாண்டியராஜன் ஆலோசனையின் பேரில் இன்ஸ்பெக்டர் திருப்பதி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி, பேச்சிமுத்து மற்றும் போலீசார் செய்திருந்தனர்.இலஞ்சியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குண்டாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை