உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / 20 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி குடிநீர் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

20 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி குடிநீர் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி:நெல்லையில் 20 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி சிஐடியு., குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பு 20 சதவீத போனஸ், 5 சதவீத கருணைத்தொகை வழங்க வலியுறுத்தி பாளை. சாந்திநகர் குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்கத்தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். சிஐடியு., செயலாளர் மோகன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். பொதுச்செயலாளர் ஆதம் இல்யாஸ், மாவட்ட பொதுத்தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் வெங்கட்ராமன், தையல் தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் வைகுண்டமணி, சிஐடியு., மாவட்ட துணைத்தலைவர் ஆறுமுகம் உட்பட பலர் பேசினர். சிஐடியு., இணைச்செயலாளர் சுடலைராஜ் போராட்டத்தை முடித்துவைத்தார்.பொருளாளர் ரசூல்மைதீன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை