உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 1,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

1,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

திருத்தணி: திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு தமிழக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்படி திருத்தணி தாசில்தார் மதியழகன் தலைமையில், துணை தாசில்தார் சரவணன் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் நேற்று திருத்தணி ரயில் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். ரயில் நிலைய முதல் நடைமேடையில், ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் மின்சார ரயில் மற்றும் விரைவு ரயிலில் தமிழக ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்துவதற்கு தயாராக வைத்திருந்த, 25 கிலோ எடை கொண்ட, 40 மூட்டைகளை வருவாய் துறையினர் பறிமுதல்செய்தனர். பின், அரிசி மூட்டைகளை சரக்கு ஆட்டோ மூலம் திருத்தணி நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை