உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திடீர் தீ விபத்தில் 2 கார்கள் நாசம்

திடீர் தீ விபத்தில் 2 கார்கள் நாசம்

தண்டையார்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டை, தாண்டவராயன் தெருவைச் சேர்ந்த காசி, 55, என்பவரது மகன் யோகராஜ், 22. இவர் நேற்று, புதுவண்ணாரப்பேட்டை, சுங்கச்சாவடியில் இருந்த உறவினர் காரை எடுத்துக் கொண்டு, தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோவில் தெரு வழியாக வந்தார்.அப்போது திடீரென, காரில் இருந்து புகை வெளியேறி உள்ளது. பயந்து போன யோகராஜ், காரில் இருந்து கீழே இறங்கிய சிறிது நேரத்தில், தீ மளமளவென பரவி கார் கொழுந்து விட்டு எரிந்து நாசமானது.இந்த தீ விபத்தில், அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ், 45, என்பவரது காரிலும் தீப்பிடித்து, கார் சேதமடைந்தது.தகவலறிந்து, தண்டையார்பேட்டை தீயணைப்பு துறையினர் வந்து, தீயை அணைத்தனர். இதில், இரண்டு கார்களும் முற்றிலும் எரிந்து நாசமாகின. காசிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை