மேலும் செய்திகள்
மக்கள் கட்டிய ரேஷன் கடை 3 ஆண்டாக வீணாகும் அவலம்
4 hour(s) ago
இன்று இனிதாக ....(06.10.2025) திருவள்ளூர்
4 hour(s) ago
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், கடம்பத்துார், பிரயாங்குப்பம், ஏகாட்டூர், விடையூர், ராமன்கோவில், செஞ்சி, அதிகத்துார், பிஞ்சிவாக்கம், தண்டலம் ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று கடம்பத்துார் எஸ்.எஸ்.எஸ். திருமண மண்டபத்தில் நடந்தது. கடம்பத்துார் ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி, கடம்பத்துார் ஒன்றிய அலுவலர்கள் மணிசேகர், செல்வகுமார் ஆகியோர் முன்னிலையில் கடம்பத்துார் ஒன்றியக் குழு தலைவர் சுஜாதா தலைமையில் நடந்த முகாமை, திருவள்ளூர் தி.மு.க., எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் துவக்கி வைத்தார். முகாமில், வருவாய், கால்நடை, சுகாதாரம், வேளாண்மை உட்பட பல துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று மனுக்களை பெற்றனர். முகாமில் 780 ஆண்கள் 1,470 பெண்கள் என அப்பகுதிவாசிகள் மொத்தம் 2,500 பேர் பங்கேற்று வீட்டு மனை பட்டா, புதிய மின் இணைப்பு என பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் வழங்கியதாக ஒன்றிய அலுவலர்கள் தெரிவித்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago