உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் ஆடி கிருத்திகை விழா 300 கேமரா வாயிலாக கண்காணிப்பு

திருத்தணியில் ஆடி கிருத்திகை விழா 300 கேமரா வாயிலாக கண்காணிப்பு

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், வரும், 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது. இதையடுத்து திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆடிக்கிருத்திகை முன்னேற்பாடுகள் குறித்து, மாவட்ட எஸ்.பி.,ஸ்ரீநிவாசாப்பெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில், அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் எஸ்.பி., ஸ்ரீநிவாசாப்பெருமாள் பேசியதாவது:திருத்தணி நகர் முழுதும் குற்ற சம்பவங்களை தடுக்க 300க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும், 20 இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து, 24 மணி நேரம் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆடிக்கிருத்திகை விழாவை ஒட்டி, ஐந்து நாட்களும், மூன்று சிறப்பு மின்சார ரயில், 300 அரசு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. விபத்துகள் தடுக்கும் வகையில் சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், 50 கி.மீ., வேகத்தில் மட்டும் வாகனங்கள் இயக்க வேண்டும். பக்தர்கள் பாதுகாப்பிற்காக வடக்கு மண்டல சரகத்தில் இருந்து, 1600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் திருத்தணி கோட்டாட்சியர் தீபா, டி.எஸ்.பி., விக்னேஷ்தமிழ்மாறன், முருகன் கோவில் இணை ஆணையர் பொறுப்பு அருணாச்சலம், அறங்காவலர் சுரேஷ்பாபு, திருத்தணி தாசில்தார் மலர்விழி, நகராட்சி ஆணையர் அருள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை