| ADDED : மே 30, 2024 12:40 AM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள சோதனைச்சாவடியில், நேற்று வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்றை நிறுத்தி சோதனை நடத்தினர்.அதில் பயணித்த, ஆந்திர மாநிலம் மச்சலிபட்டினம் பகுதியைச் சேர்ந்த நாராயணன், 35, கோபி, 34, ஆகியோர், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற, 38 கிலோ வெள்ளி ஆபரணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதை தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட ஆபரணங்கள் மற்றும் இருவரையும், சென்னை வருமான வரித் துறையினரிடம், ஆரம்பாக்கம் போலீசார் ஒப்படைத்தனர். இருவரும் வெள்ளி ஆபரணங்களை தயார் செய்து, விற்பனைக்கு எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.