உள்ளூர் செய்திகள்

77 ரவுடிகள் கைது

வேப்பேரி: சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 77 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் 12 காவல் மாவட்ட துணை கமிஷனர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து, குற்ற தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் வெவ்வேறு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், பழைய குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் 77 பேர் கைது செய்யப்பட்டனர். குற்ற பின்னணி நபர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி