உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாணவர் விடுதியில் சிறுவன் மாயம்

மாணவர் விடுதியில் சிறுவன் மாயம்

ஆர்.கே.பேட்டை:திருத்தணி காசிநாதபுரம் குமார் மகன் மணிகண்டன், 14. மண்கண்டன், கடந்த 6ம் தேதி, குழந்தைகள் நல அலுவலகம் வாயிலாக, ஆர்.கே.பேட்டை அடுத்த பெத்தேல்புரத்தில் செயல்பட்டு வரும் மாணவர் விடுதியில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் மதியம், மணிகண்டன் காணாமல் போனதாக, விடுதியில் உள்ளவர்கள், விடுதி காப்பாளர் விக்டர் மனோகரனுக்கு தெரிவித்துள்ளனர். இதையடுத்து சுற்றுப்பகுதியில் எங்கு தேடியும், மணிகண்டனை கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து விக்டர் மனோகரன், ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார், மணிகண்டனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்