மேலும் செய்திகள்
புறநகர் மின்சார ரயில்களில் அரிசி கடத்தல் அதிகரிப்பு
18 hour(s) ago
பறிமுதல் வாகனங்கள் வீணாகி வரும் அவலம்
18 hour(s) ago
பள்ளிப்பட்டு : பள்ளிப்பட்டு நகரில் இருந்து நகரி செல்லும் சாலையில் அமைந்துள்ளது கோனேடம்பேட்டை கிராமம். இந்த கிராமத்தில், நகரி சாலையை ஒட்டி, நிதிநாடும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 100 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி அமைந்துள்ள பகுதியில் சாலையின் குறுக்கே நீர்வரத்து கால்வாய் பாய்கிறது. இதற்காக பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் தடுப்பு சுவர் கடந்த சில மாதங்களுக்கு முன், விபத்து ஒன்றில் இடிந்து விழுந்தது. தடுப்பு சுவர் இல்லாத நிலையில், சாலையை ஒட்டி திறந்த நிலையில் உள்ள நீர்வரத்து கால்வாயால், இந்த வழியாக பயணிக்கும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதனால், மாணவர்களின் பெற்றோர் அச்சத்தில் தவித்து வருகின்றனர். சாலையோரம் உள்ள இந்த விபத்து அபாயம் குறித்து இந்த பகுதியில் எச்சரிக்கை பதாகையும் வைக்கப்படவில்லை. மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
18 hour(s) ago
18 hour(s) ago