உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கீச்சலம் அரசு பள்ளி எதிரே நிழற்குடை அவசியம்

கீச்சலம் அரசு பள்ளி எதிரே நிழற்குடை அவசியம்

பள்ளிப்பட்டு : பள்ளிப்பட்டில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் அமைந்துள்ளது கீச்சலம் கிராமம். இந்த கிராமத்தில், 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கீச்சலம் கிராமத்தின் வடக்கில் நெடுஞ்சாலையை ஒட்டி, அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், கீச்சலம், நாராயணபுரம், ராமசமுத்திரம், எகுவமிட்டூர், சி.என்.கண்டிகை, நெடுங்கல் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு பேருந்து வாயிலாக வெளியூர்களை சேர்ந்த மாணவர்கள் வந்து படிக்கின்றனர்.பள்ளி எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து இவர்கள் பயணிக்கின்றனர். ஆனால், இங்கு மாணவர்கள் காத்திருக்க நிழற்குடை ஏதும் இல்லை. இதனால், சாலையோரத்தில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மழைக்காலத்தில் மிகவும் அவதிப்படுகின்றனர்.மாணவர்களின் தேவை மற்றும் பாதுகாப்பு கருதி, இந்த பகுதியில் எதிரெதிரே இரண்டு நிழற்குடைகளை அமைக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்