உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூரில் அகாடமி விளையாட்டு வீரர்கள் எதிர்பார்ப்பு

திருவள்ளூரில் அகாடமி விளையாட்டு வீரர்கள் எதிர்பார்ப்பு

திருவள்ளூர்,:திருவள்ளூர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த விளையாட்டு அகாடமி அமைக்க வேண்டும் என, விளையாட்டு ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில், 14 ஏக்கர் பரப்பளவில், மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு, 6,068 சதுர அடி பரப்பளவில் 400 மீட்டர் ஓடுகள பாதை, கால்பந்து, கைப்பந்து, கூடைப் பந்து மைதானம், பளு துாக்கும் கூடம் உள்ளது. விளையாட்டு வீரர்கள் தங்கும் அறை, நிர்வாக அலுவலகத்துடன் கூடிய திறந்த வெளி விளையாட்டு அரங்கமும் உள்ளது. மேலும், 1 கோடி ரூபாய் மதிப்பில் நீச்சல் குளம், 1.06 கோடி ரூபாய் மதிப்பில் உள்விளையாட்டரங்கமும் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், கடந்த 2015ல் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தை அப்போதைய விளையாட்டு துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.அப்போது, விளையாட்டு அரங்கில் உள்ள வசதிகள், குறைபாடுகளை, மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் அமைச்சர் கேட்டறிந்த பின், செய்தியார்களிடம் கூறுகையில், 'திருவள்ளூர் மாவட்டத்தில் விளையாட்டு துறையை மேம்படுத்தி, திறமையான வீரர்களை உருவாக்க ஏதுவாக, பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படும். மேலும், அடுத்த ஆண்டு, ஒருங்கிணைந்த விளையாட்டு அகாடமியை திருவள்ளூரில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.ஆனால், இதுவரை விளையாட்டு அகாடமி ஆரம்பிப்பதற்கான ஆயத்த பணி கூட செய்யப்படவில்லை. இதனால், விளையாட்டு வீரர்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர். எனவே, திருவள்ளூரில் விளையாட்டு அகாடமி உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விளையாட்டு ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை