உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அதீத போதையால் பாதிப்பு? சிறை கைதி திடீர் உயிரிழப்பு

அதீத போதையால் பாதிப்பு? சிறை கைதி திடீர் உயிரிழப்பு

புழல்:ஆவடி அடுத்த மோரை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 22. இவர், கஞ்சா விற்ற வழக்கில், சோழவரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கடந்த 2ம் தேதி புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டார்.நேற்று முன்தினம், அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. சிறை மருத்துவமனையில் உடல்நிலை சோதிக்கப்பட்டது. அப்போது, கஞ்சா மற்றும் அதீத போதை பழக்கம் காரணமாக, நரம்பு மண்டலம் பாதிப்பால், ரத்தம் உறைந்து உடல்நலம் பாதிக்கப்பட்டது தெரிந்தது.மேல் சிகிச்சைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அன்றிரவே உயிரிழந்தார். இது குறித்து, புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை