உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அம்பத்துார் ஐ.டி.ஐ.,யில் மாணவியர் நேரடி சேர்க்கை

அம்பத்துார் ஐ.டி.ஐ.,யில் மாணவியர் நேரடி சேர்க்கை

திருவள்ளூர்:அம்பத்துார் மகளிர் ஐ.டி.ஐ.,ல் மாணவியர் நேரடி சேர்க்கை வரும், 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:அம்பத்துார் அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில், தையல் தொழில்நுட்பம், கோபா, கட்டட பட வரைவாளர் மற்றும் 'ஸ்டெனோகிராபர்' ஆகிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 8, 10ம் வகுப்பு தேர்ச்சி, மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதோர் இப்பயிற்சிக்கு நேரடி மாணவியர் சேர்க்கை, வரும் 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.பயிற்சியில் சேருவோருக்கு மாத உதவித் தொகை 750 ரூபாய், இலவச பஸ் பாஸ், சைக்கிள், பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், இரு செட் சீருடைகள், ஷூ மற்றும் சிறந்த தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.ஆர்வம் உள்ளோர் அனைத்து சான்றிதழ்களுடன், நேரில் அணுகலாம். விபரங்களுக்கு, 98407 56210, 94440 17528 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி