உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையில் திரியும் மாடுகளால் அவதி அதிகாரிகள் மெத்தனம்; மக்கள் அச்சம்

சாலையில் திரியும் மாடுகளால் அவதி அதிகாரிகள் மெத்தனம்; மக்கள் அச்சம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம், நாகலாபுரம், பிச்சாட்டூர், நகரி, புத்துார், ரேணிகுண்டா, திருப்பதி, கடப்பா, கர்நுால், நந்தியால், ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் ஊத்துக்கோட்டை பஜார் வழியே செல்கின்றன.போக்குவரத்து நெரிசல் மிகுந்த இப்பகுதியில் சிலர் மாடுகளை வளர்க்கின்றனர். இவர்கள் தங்களது மாடுகளை வீடுகளில் கட்டி வளர்க்காமல், சாலையில் திரிய விடுகின்றனர். இவைகள் தீனிக்காக அங்குள்ள பழம், பூ, காய்கறி கடைகளுக்குச் செல்கின்றன. அங்குள்ள வியாபாரிகள் அவற்றை துரத்தும் போது, மாடுகள் தறிகெட்டு ஓடும் போது, வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மீது மோதி செல்வதால், அவர்கள் காயம் அடைகின்றனர்.நேற்று சென்னை திருவொற்றியூரில் சாலையில் சென்று கொண்டு இருந்த பெண் ஒருவரை, சாலையில் திரிந்த மாடு முட்டியதில், தலை, உடலின் பல பகுதிகளில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன் கலெக்டர் துரித கதியில் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.l திருமழிசை பேரூராட்சியில் அமைந்துள்ள திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை வழியே தினமும் அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை பஸ், கனரக வாகனம், இலகு ரக வாகனம், இரு சக்கர வாகனம் என தினமும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த நெடுஞ்சாலை மீடியனில் இளைப்பாறும் கால்நடைகளால்வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலையில் இளைப்பாறும் கால்நடைகளை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை