உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளிப்பட்டில் ரிப்ளெக்டர் இல்லாத பேரிகார்டு

பள்ளிப்பட்டில் ரிப்ளெக்டர் இல்லாத பேரிகார்டு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு நகரில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில், வட்டாட்சியர் அலுவலகம் அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியின் எதிரே, மாநில நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில், இந்த தனியார் பள்ளியின் எதிரே பேரிகார்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இந்த பேரிகார்டுகளில், 'ஒளியை பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்கள் ஏதும் ஒட்டப்படவில்லை. பள்ளியின் பெயர் மட்டுமே விளம்பரப்படுத்தும் விதமாக எழுதப்பட்டுள்ளது. பள்ளியின் பெயருடன் பிரதிபலிப்பான் ஏதும் இன்றி சாலையின் குறுக்கே நிறுத்தப்படும் பேரிகார்டால், வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். பேரிகார்டை முறையான பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களுடன், பாதுகாப்பாக சாலையில் நிறுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ