உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூபால் நகர் சிறுவர் பூங்கா ரூ.15 லட்சத்தில் புதுப்பிப்பு

பூபால் நகர் சிறுவர் பூங்கா ரூ.15 லட்சத்தில் புதுப்பிப்பு

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பூபால் நகர் ரேஷன் கடை அருகே சிறுவர் பூங்கா உள்ளது. அங்கு, பூபால் நகர், ஸ்ரீராம் கார்டன், முனுசாமி நகர், சரோஜம்மாள் நகர் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த மக்களின் பொழுதுபோக்கு இடமாகஅந்த சிறுவர் பூங்கா இருந்தது. முறையான பராமரிப்பின்றி போனதால் பூங்காவில் இருந்த சிறுவர் விளையாட்டு மற்றும் இளைஞர் உடற்பயிற்சி உபகரணங்கள், வேலி உள்ளிட்டவை சேதமடைந்தது. இதனால் பல ஆண்டுகளாக பூங்கா பயன்பாடின்றி போனது. இந்நிலையில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய பொது நிதியில் இருந்து, முதல் கட்டமாக, 15 லட்சம் ரூபாய் ஒதுக்கி பூங்காவில் புதுப்பிப்பு பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது. சுற்றுச்சுவர், நடைபாதை, இருக்கை அமைக்கப்பட இருக்கிறது. அடுத்த கட்டமாக, சிறுவர் விளையாட்டு மற்றும் இளைஞர் உடபயிற்சி உபகரணங்கள், உயர் மின் விளக்கு கோபுரம் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை