உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புதர்மண்டிய கழிவுநீர் கால்வாய்

புதர்மண்டிய கழிவுநீர் கால்வாய்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் அரிசந்திராபுரம் ஊராட்சியில், மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் செல்லும் கால்வாய் உள்ளது.ஊராட்சி நிர்வாகம் இக்கால்வாயை முறையாக பராமரிக்காததால், கால்வாயில் செடி, கொடிகள் மண்டி, குப்பை குவியலாக உள்ளது. இதனால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறாமல் ஒரே இடத்தில் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது.இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளதாக, அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, கால் வாயை துார்வாரி சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை