உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அம்பத்துார் ஐ.டி.ஐ.,யில் மாணவர்களுக்கு அழைப்பு

அம்பத்துார் ஐ.டி.ஐ.,யில் மாணவர்களுக்கு அழைப்பு

திருவள்ளூர்:அம்பத்துார் அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில், காலியிடத்திற்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:அம்பத்துார் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்-, 2024ம் ஆண்டு அனைத்து தொழிற்பிரிவுகளில் மீதமுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான நேரடி சேர்க்கை, கடந்த 1 முதல் வரும் 15ம் தேதி வரை நடக்கிறது.பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள், தங்கள் சேர்க்கை விண்ணப்பங்களை, அம்பத்துார் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பித்து பயிற்சியில் சேரலாம்.விண்ணப்பதாரர், அனைத்து அசல் சான்றிதழ் மற்றும் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -- 5 ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை