உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையில் கால்நடைகள் உலா விபத்தில் சிக்கும் வாகனங்கள்

சாலையில் கால்நடைகள் உலா விபத்தில் சிக்கும் வாகனங்கள்

திருவாலங்காடு:திருவள்ளூர் --- அரக்கோணம் நெடுஞ்சாலையில் தினமும், 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. புண்டரீகபுரம், முள்வாய், பால்வாய் உள்ளிட்ட கிராம மக்கள் திருவாலங்காடு ரயில் நிலையத்திற்கு இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர்.மேலும் சென்னை, திருவள்ளூர் செல்வோர் பெரும்பாலும் இருசக்கர வாகனத்தில் இந்த சாலை வழியாகவே சென்று வருகின்றனர். இந்நிலையில் வியாசபுரம் மாநில நெடுஞ்சாலையில் கால்நடைகள் ஜாலியாக உலா வருகின்றன. இவ்வாறு வரும் கால்நடைகள், சாலை நடுவில் கும்பலாக அமர்ந்து கொள்ளும். திடீரென எழுந்து, சாலையின் குறுக்கே வரும். அப்போது, சாலையில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி, விபத்திற்கு உள்ளாகின்றனர். இதுபோன்ற விபத்து சம்பவங்கள், சாலையில் அடிக்கடி நடப்பதால், வாகன ஓட்டிகள், அச்சத்துடனேயே, செல்கின்றனர்.எனவே, சாலையில் திரியும் கால்நடைகளை, பிடித்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை