உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குழந்தைகள் பராமரிப்பு ஆலோசனை கூட்டம்

குழந்தைகள் பராமரிப்பு ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர்,:திருவள்ளூர் ஐ.ஆர்.சி.டி.எஸ்., அலுவலகத்தில் பால மந்திர்- 'கின்ஷிப் கேர்' சார்பாக குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நல குழுவின் தலைவர் மேரி ஆக்சிலியா தலைமை வகித்து பேசியதாவது:குழந்தைகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. குழந்தைகளிடையே பாலின சமத்துவம் குறித்தும், குழந்தைகள் எதிர்கொள்ளும் பல்வேறு ஆபத்துகள் குறித்தும், தாய்மார்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். 'சைபர்' பாதுகாப்பு உட்பட பள்ளிகள், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள அபாயங்களை உணர்ந்து பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் ஏற்பட்டால், உடனடியாக 'சைல்டு லைன்' பாதுகாப்பு எண்.1098 க்கு தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் மலர்விழி, ஐ.ஆர்.சி.டி.எஸ்., ஸ்டீபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி