உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பராமரிப்பில்லாத சமுதாய கூடம் புதுப்பட்டு பகுதிவாசிகள் அவதி

பராமரிப்பில்லாத சமுதாய கூடம் புதுப்பட்டு பகுதிவாசிகள் அவதி

கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றியம் புதுப்பட்டு ஊராட்சியில் பகுதிவாசிகள் தங்கள் இல்ல சுப நிகழ்ச்சி பயன்பாட்டிற்காக கடந்த 1996-1997ம் ஆண்டு ஜவகர் வேலை வாய்ப்பு திட்டத்தில் 1.50 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம் கட்டப்பட்டது.அதன்பின் கடந்த 2013-2014ம் ஆண்டு ஊரக கட்டடங்கள் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு திட்டத்தின் கீழ் 2.10 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டது.தொடர்ந்து பகுதிவாசிகள் பயன்படுத்தி வந்த நிலையில் முறையான பராமரிப்பில்லாததால் தற்போது கிடங்காக மாறியுள்ளது. இதனால் பகுதிவாசிகள் தங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் கடும் சிரமப்பட்டு வருவதோடு தனியார் திருமண மண்டபங்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.ஊராட்சி நிர்வாகம் சார்பில் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஊராட்சி நிர்வாகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சமுதாய கூடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென புதுப்பட்டு பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ