உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

சேதமான மின்கம்பம் சீரமைக்கப்படுமா?பொன்னேரி அடுத்த மெதுார் கிராமம், ஆசானபூதுார் செல்லும் சாலை மற்றும் விநாயகர் கோவில் தெருவில் குடியிருப்புகளின் அருகில் உள்ள மின்கம்பம் ஒன்று சேதம் அடைந்து சாய்ந்த நிலையில் இருக்கிறது.கம்பத்தின் அடிப்பகுதி சேதம் அடைந்து, எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழுவதற்கு வாய்ப்பு உள்ளதால், குடியிருப்புவாசிகள் மற்றும் ஆசானபூதுார் சாலையில் செல்பவர்கள் அச்சம் அடைகின்றனர்.அசம்பாவிதங்கள் நேரிடும் முன், சேதமான மின்கம்பத்தை மாற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே. அருள், பொன்னேரிகாட்சி பொருளான குடிநீர் வழங்கும் இயந்திரம் திருத்தணி நகராட்சி அலுவலகத்திற்கு தினமும், பிறப்பு, இறப்பு சான்று மற்றும் ஆதார் கார்டு பெறுவதற்கும் குடிநீர் சொத்து வரி செலுத்துவதற்கும், நுாற்றுக் கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். மேலும் அலுவலகத்தில், 50க்கும் மேற்பட்ட அலுவலக ஊழியர்கள், 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஊழியர்கள் நலன்கருதி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்பில் குடிநீர் இயந்திரம் கொள்முதல் செய்யப்பட்டது.இதை, நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் சில மாதங்களாக குடிநீர் இயந்திரம் காட்சி பொருளாக உள்ளது. தற்போது, குடிநீருக்காக அலுவலக ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். எனவே பழுதான இயந்திரத்தை சீரமைக்க வேண்டும்.- எஸ். சரவணன், திருத்தணிபள்ளி கதவு சரி செய்யப்படுமா?திருவள்ளூர் -- - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை திருவாலங்காடில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப் பள்ளி. இங்கு 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் நுழைவாயிலில் அமைந்துள்ள இரும்பு கதவு உடைந்து சேதமடைந்துள்ளது. கதவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - கே. மகேஷ், திருவாலங்காடுகுழாய் உடைப்பால்வீணாகும் குடிநீர்திருவள்ளூர் ஒன்றியம், செவ்வாப்பேட்டை ஊராட்சி, எப்.சி.ஐ., காலனி, 2வது தெருவில் குடிநீர் குழாய் ஒன்று, உடைந்து தண்ணீர் விரயமாகி வருகிறது. தற்போது அப்பகுதியில் குடிநீர் பிரச்னை உள்ள நிலையில், தண்ணீர் வீணாகிறது.விரயமாகும் குடிநீர் குழாயை சுற்றிலும் தேங்கி கொசு உற்பத்தியாகி, மக்களுக்கு மலேரியா, டெங்கு காய்ச்சல் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம், குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.-கே.கோபிநாதன், செவ்வாப்பேட்டைதிருமழிசையில் குப்பை அகற்றப்படுமா?பூந்தமல்லி தாலுகா, திருமழிசை பேரூராட்சி 3வது வார்டு சிவன் கோவில் தெரு, எம்.ஜி.ஆர்., சிலை அருகில் உள்ள காலி மனையில் மழை போல் குப்பை தேங்கியுள்ளது. இந்த காலி மனையில் சுற்றி உள்ளவர்கள், குப்பை கொட்டுவதால், அருகில் சிவன் கோவில் பேருந்து நிறுத்தத்திற்கு வருவோர் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். திருமழிசை பேரூராட்சி முழுதும், இதுபோல், குப்பை தேங்கி உள்ளதை பேரூராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும்.-- ந.கோதை ஜெயராமன், நசரத்பேட்டை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை