உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொன்னேரி ரயில்வே சுரங்கப்பாதையில் நெரிசல்

பொன்னேரி ரயில்வே சுரங்கப்பாதையில் நெரிசல்

பொன்னேரி:பொன்னேரி, திருவாயற்பாடி பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை வழியாக, மெதுார், தேவம்பட்டு, பழவேற்காடு, அண்ணாமலைச்சேரி, பெரும்பேடு என, 100க்கும் அதிகமான கிராமங்களின் நுழைவு வாயிலாகும்.மேற்கண்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் அனைத்து அத்யவாசிய தேவைகளுக்கும் பொன்னேரி வந்து செல்ல இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்துகின்றனர்.இந்த சுரங்கப்பாதையானது, 70ஆண்டுகளுக்கு முன், அப்போதைய போக்குவரத்திற்கு ஏற்ப அமைக்கப்பட்டது. தற்போது, தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சுரங்கப்பாதையின் வழியாக பயணிக்கும் நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மழை பெய்தால் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி, அவற்றை வெளியேற்றும் வரை வாகனங்கள் தடுமாற்றத்துடன் செல்ல வேண்டும். சுரங்கப்பாதை குறுகலாக இருப்பதால், இரண்டு கனரக வாகனங்கள் எதிரெதிரே செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணிக்கும் நிலை உள்ளது.காலை, மாலை நேரங்களில் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, பெரும் தவிப்பிற்கு ஆளாகின்றனர். மேலும், பொன்னேரி பஜார் பகுதி, தேடி, திருவாயற்பாடி சுரங்கப்பாதை அருகில் உள்ள சாலையோரங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் அமைக்கப்படுகின்றன.இது வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் சிரமங்களை ஏற்படுத்துகிறது. பல்வேறு கிராமங்களின் நுழைவுவாயில் பகுதியாக உள்ள திருவாயற்பாடி சுரங்கப்பாதை விரிவுபடுத்தவும், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்