உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சென்னை - ஹூப்ளி ரயில்களில் நவீன பெட்டிகள் இணைப்பு

சென்னை - ஹூப்ளி ரயில்களில் நவீன பெட்டிகள் இணைப்பு

சென்னை, : சென்னை சென்ட்ரல் - ஹூப்ளி விரைவு ரயில்களில், வரும் 20ம் தேதி முதல், எல்.எச்.பி., பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளன. விரைவு ரயில்களில், பழைய பெட்டிகள் நீக்கப்பட்டு, எல்.எச்.பி., எனப்படும் நவீன ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன.இந்த பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது. அதிர்வுகள் இல்லாமல், பாதுகாப்பாகவும், ரயிலின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளன. சொகுசு இருக்கைகள், மொபைல் போன் சார்ஜிங் வசதி உட்பட பல்வேறு வசதிகள் இருக்கும். எல்.எச்.பி., சாதாரண பெட்டிகளில் 80 படுக்கைகளும், 'ஏசி' பெட்டியில் 72 படுக்கைகளும் இருக்கும்.இந்நிலையில், சென்ட்ரல் - கர்நாடகா மாநிலம் ஹூப்ளி விரைவு ரயிலில், வரும் 21ம் தேதி முதலும், ஹூப்ளி - சென்ட்ரல் ரயிலில், வரும் 20ம் தேதி முதலும், எல்.எச்.பி., பெட்டிகள் இணைத்து இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ