உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காட்டன் சூதாட்டம் இருவருக்கு சிறை

காட்டன் சூதாட்டம் இருவருக்கு சிறை

திருவள்ளூர்:திருவள்ளூர் நகர காவல் உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் போலீசார் திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் றேந்று முன்தினம் மாலை ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருவள்ளூரைச் சேர்ந்த பாண்டியன், 38 மற்றும் ஊத்துக்கோட்டை கூனிப்பாளையத்தைச் சேர்ந்த சவுகத், 19 என தெரிய வந்தது. இருவரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் எனும் லாட்டரி சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் நகர போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 13,590 ரூபாய் பணம் 3 பில் புக் மற்றும் 5 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.இருவரையும் திருவள்ளூர் நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை