உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வடமதுரை பஸ் நிறுத்த இருக்கைகள் சேதம்

வடமதுரை பஸ் நிறுத்த இருக்கைகள் சேதம்

பெரியபாளையம்:பெரியபாளையம் அடுத்த வடமதுரை கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு பெரியபாளையம் செல்கின்றனர். இதேபோல், அப்பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் உயர்நிலை, மேல்நிலைக் கல்விக்கு பெரியபாளையம் செல்ல வேண்டும். இதற்கு அரசு பேருந்து போக்குவரத்து பெரிதும் பயன்படுகிறது.அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளி அருகே, பயணியர் காத்திருக்கும் நேரத்தில் பேருந்து நிறுத்தம் இல்லாமல் இருந்தது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ஒன்றிய கவுன்சிலர் நிதியில் இருந்து 3 லட்சம் மதிப்பில் நிழற்குடை மற்றும் இருக்கைகள் அமைக்கப்பட்டன. துவக்கத்தில் முறையான பராமரிப்பு இருந்ததால், நிழற்குடை, இருக்கைகள் பயணிகளுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. தற்போது பராமரிப்பு இல்லாததால், நிழற்குடையில் இருந்த இருக்கைகள் உடைந்து காணப்படுகிறது. இடமும் சுகாதாரம் இன்றி உள்ளதால், பயணியர் அங்கு நிற்க, அமர முடியாத நிலை உள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, வடமதுரை ஊராட்சியில் உள்ள நிழற்குடை மற்றும் இருக்கைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி