உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொதட்டூரில் இடித்து அகற்றப்படாத மேல்நிலை குடிநீர் தொட்டியால் அபாயம்

பொதட்டூரில் இடித்து அகற்றப்படாத மேல்நிலை குடிநீர் தொட்டியால் அபாயம்

பொதட்டூர்பேட்டை : பொதட்டூர்பேட்டை அடுத்த வாணிவிலாசபுரத்தில், 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு மேல்நிலை குடிநீர்தொட்டி வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மேல்நிலை குடிநீர் தொட்டி உருக்குலைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், அந்த சுற்றுப்பகுதியில் வசிப்பவர்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். இந்நிலையில், மேல்நிலை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யவும் முடியாத நிலை உள்ளது. இது குறித்து பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க கருத்துரு தயார் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார். இதே போல், ஆர்.கே.பேட்டையில் சுந்தரராஜ பெருமாள் கோவில் அருகே, 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இந்த மேல்நிலை குடிநீர் தொட்டி, கடந்த 1988ல் கட்டப்பட்டது. 35 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த மேல்நிலை குடிநீர் தொட்டி, கடந்த சில ஆண்டுகளாக உருக்குலைந்து கிடக்கிறது. மேல்நிலை தொட்டி மீது ஏறி சுத்தம் செய்யவும் தொழிலாளர்கள் அச்சப்பட்டு வருகின்றனர். இதுவரை செயல்பாட்டில் உள்ள இந்த மேல்நிலை குடிநீர் தொட்டி வாயிலாக குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது. இந்நிலையில், புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி 1 லட்சம் லிட்டர் கொள்ளளவில் கட்டுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் துவங்க உள்ளன என ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ