| ADDED : ஆக 19, 2024 11:02 PM
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில் தினசரி காலை, 6:00 மணி முதல் இரவு, 8:45 மணி வரை கோவில் நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். நேற்று ஆவணி அவிட்டத்தை ஒட்டி மதியம், 12:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டது. இந்த நேரத்தில் மலைக் கோவிலில் உள்ள அர்ச்சகர்கள் மற்றும் தலைமை குருக்கள் ஆவணி அவிட்டம் ஒட்டி புதியதாக பூணுால் அணியும் விழா காவடி மண்டபத்தில் நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் கலந்துக் கொண்டனர். முன்னதாக சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமம் நடத்தப்பட்டது. மாலை, 3:00 மணிக்கு பின் வழக்கம் போல் மூலவரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.