உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அங்கன்வாடி மைங்களில் பழுதடைந்த எடை இயந்திரங்கள்

அங்கன்வாடி மைங்களில் பழுதடைந்த எடை இயந்திரங்கள்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில், 124 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில், அரசு சார்பில் 113 அங்கன்வாடி மையமும், தனியார் பங்களிப்பில் 11 அங்கன்வாடி மையமும் செயல்படுகிறது.இங்குள்ள அங்கன்வாடி மையங்களில் குறைந்தது, 15 குழந்தைகள் வரை பராமரிக்கப்படுகின்றனர். மொத்தமாக, 2,300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இங்கு, குழந்தைகளுக்கு சத்தான உணவுகள், தானியங்கள் வழங்கப்பட்டு, அவர்களின் உடல்நலம் பாதுகாக்கப்படுவதுடன், அடிப்படை கல்வியும் கற்பிக்கப்படுகிறது. அதேபோல், கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து மாவு, உடல் எடை, உயரம் போன்றவை மாதந்தோறும் அளவீடு செய்யப்படுகிறது. இந்நிலையில், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணியர் பயனடைய அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்பட்ட எடை மற்றும் உயரம் அளவீடு செய்யும் இயந்திரங்கள் பெரும்பாலான மையங்களில் பழுதடைந்து உள்ளன. இதுகுறித்து, கர்ப்பிணியர் மற்றும் குழந்தையின் பெற்றோர் கூறியதாவது:அங்கன்வாடி மையங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் எடை, உயரம் அளவீடு செய்யும் இயந்திரங்கள், சில நாட்களிலேயே பழுதடைந்து விடுகிறது.இந்த இயந்திரங்களால் ஒவ்வொரு முறை உடல் எடையை கணக்கீடும் போது, வெவ்வேறு அளவில் காண்பிக்கிறது. இதனால் குழந்தையை எடை போடும் பெற்றோர் அதிர்ச்சி அடைகின்றனர்.மேலும், கர்ப்பிணியர் எடை கணக்கீடும் போது பெரிய வித்தியாசம் காண்பிப்பதால், அவர்கள் மன ரீதியாக வேதனை அடைகின்றனர். மேலும், திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள அனைத்து மையத்திலும், மூன்று எடை கணக்கீடும் இயந்திரம் இருந்தும் பயனற்று உள்ளது. எனவே, பழுதடைந்த எடை இயந்திரங்களை மாற்றியமைக்கவும், தரமான இயந்திரங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை