உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கோதண்டராம சுவாமி குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

கோதண்டராம சுவாமி குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

திருவாலங்காடு:திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான கோதண்டராம சுவாமி கோவில் கனகம்மாசத்திரம் அடுத்த நெடும்பரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் 1,100 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டதாக கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன.இந்த குளத்தில் ராமர் லட்சுமணர் நீராடியதாக ஐதீகம் எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த குளத்தில் நீராடுவர்.அதேபோன்று பங்குனி மாதத்தில் 10 நாட்கள் ராமநவமி விழா இந்த கோவிலில் விஷேசமாக நடைப்பெறும் 9ம் நாள் தீர்த்தவாரி அன்று உற்சவர் குளத்தில் நீராடும் நிகழ்வு நடைப்பெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக குளத்தின் படிகள் சேதமடைந்து உள்ளதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இந்நிலையில் குளத்தின் படிகள் மற்றும் குளத்தின் மைய மண்டபம் சேதமடைந்துள்ளதுடன் குளத்தில் செடிகள் முளைத்து காணப்படுகிறது.இதை சீரமைக்க திருத்தணி கோவில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை