உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முன்னேற்பாடுகள் இன்றி விரிவாக்கம் குளமாக மாறிய துராபள்ளம் பஜார்

முன்னேற்பாடுகள் இன்றி விரிவாக்கம் குளமாக மாறிய துராபள்ளம் பஜார்

கும்மிடிப்பூண்டி, : சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம், கும்மிடிப்பூண்டி அருகே துராபள்ளம் பஜார் பகுதி உள்ளது. இங்கு வங்கிகள், பள்ளிகள், கோவில்கள், மசூதி, மீன் மார்க்கெட் மற்றும் 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.எப்போதும் பரபரப்பாக காணப்படும் துராபள்ளம் பஜார் மீது தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலம் செல்கிறது. மேம்பாலம் மற்றும் துராபள்ளம் பஜார் பகுதி சாலை விரிவாக்கம் செய்யும் பணிகளுக்காக, சில மாதங்களுக்கு முன், சாலையோர கட்டடங்கள் இடித்து, சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.பஜார் பகுதியில் மின் கம்பங்களை இடம் மாற்றாமல், மக்கள் சென்று வர மாற்று சாலை ஏற்படுத்தாமல், தற்போது மேம்பால விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், மக்கள் பயன்படுத்தும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதுடன், சாலையின் நடுவே ஆபத்தாக மின் கம்பங்கள் உள்ளன.நேற்று பெய்த மழையில் குண்டும், குழியுமாக இருந்த சாலை, தற்போது மழைநீர் குட்டைகளாக காட்சியளிக்கின்றன. அதை கடந்து செல்லும் மக்களும், பள்ளி மாணவர்களும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.எனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக துராபள்ளம் பஜார் பகுதியில் முறையான மாற்று சாலை ஏற்படுத்தி, மின் கம்பங்களை அகற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி