உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கூவம் ஆற்றில் மூதாட்டி உடல் மீட்பு

கூவம் ஆற்றில் மூதாட்டி உடல் மீட்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த வெங்கத்துார் கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம், 57. இவரது தாயார் காந்தா, 74. இவர் கடந்த 1ம் தேதி வீட்டிலிருந்து திடீரென மாயமானார்.அருணாச்சலம் தனது உறவினர்கள் உதவியுடன் பல இடங்களில் தேடிவந்த நிலையில் 2ம் தேதி மாலை வரதராஜபுரம் பகுதி கூவம் ஆற்றங்கரையோரம் காந்தாவின் காலணி மட்டும் கிடந்தது.இதையடுத்து ஆற்றில் இறங்கி பார்த்தபோது சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து அருணாச்சலம் கொடுத்த புகாரின்படி வழக்கு பதிந்த திருவள்ளூர் நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ